GuidePedia

(றிப்கான் கே. சமான்)
நேற்று 2015.09.11ம் திகதி மாலை புனித மக்கா ஹரம் ஷரீபில் இடம் பெற்ற திடீர் விபத்துச் சம்பவத்தினால் பல உயிர்கள் காவுகொள்ளப் பட்டுள்ளன என்ற மரணச் செய்தி எனக்கு ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அன்மைக்காலங்களாக புனித மக்கா ஹரம் ஷரீபில் கட்டுமானப் பணிகள் இடம் பெற்று வருகின்றது,  இந்த நிலையில் கட்டுமானப்பணிகளுக்கு பயன் படுத்துவதற்காகவென அங்கு பல  கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

அந்தவகையில் கட்டுமானப்பணிகளுக்கான பல கிரைன் இயந்திரங்கள் நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. இவ்வாறு வைக்கப்பட்டிருந்த பலகிரைன் இயந்திரங்களில் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்ததில் அங்கு குழுமியிருந்தவர்கள் பலர் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

இத்திடீர் அனர்த்தத்தில்; சிக்கி வபாத்தானவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து இவர்களின் நற்செயல்களை அங்கீகரிப்பதோடு இவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை கொடுக்கவேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.

மேலும் பலர் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் வெகுவிரைவில் குனமடையவேண்டும் இவர்களுக்கு அல்லாஹ் தேக ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கவேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக இறை  இல்லம் நாடி வந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த திடீர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும்,  இவர்களின் இளப்பால் கவலையுடன் இருக்கும் இவர்களின் குடும்மத்தினர், நண்பர்கள், மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்ததை தெரிவிப்பதோடு  அல்லாஹ் இவர்களது உள்ளங்களில் ஆறுதலை கொடுப்பதோடு மன அமைதியையும் ஏற்படுத்த வேண்டும்.

இறந்தவருக்காகச் செய்யும் துஆ
اَللّهُمَّ اغْفِرْ لِ .[……….]وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
அல்லாஹும்மக்ஃபிர் லி [……………….] வர்ஃபஃ தரஜ(த்)தஹு ஃபில் மஹ்திய்யீன வஃக்லுஃப் ஹு ஃபீ அகிபிஹி ஃபில் காபிரீன் வக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வநவ்விர் லஹு ஃபீஹி.

பொருள் : 
இறைவா! […………………] மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
ஆதாரம்: முஸ்லிம்






 
Top