GuidePedia

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக வாக்களித்து பல இலட்சங்களை சுருட்டிய போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து நூற்றுக்கணக்கான மருத்துவ சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான எந்தவித அனுமதியும் இல்லாத நிலையில் அவர் நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை அறவிட்டுள்ளார்.
இவருடன் இணைந்து இளைஞர்களை ஏமாற்றிய இன்னொரு நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்துள்ள வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள், அவரைத் தேடி வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.




 
Top