புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பலர் இன்று (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இன்று பதவியேற்ற இராஜாங்க அமைச்சர்கள் விபரம்
1. ரி.பி. ஏக்கநாயக்க - காணி இராஜாங்க அமைச்சர்
2.ஏ.எச்.எம். பௌஸி - அரச மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சர்
3. பிரியங்கர ஜயரத்ன - சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்
4. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - நிதி இராஜாங்க அமைச்சர்
5. டிலான் பெரேரா - பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர்
6.ரவீந்திர சமரவீர - தொழில் மற்றும் தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர்
7. திலீப் வெதஆராச்சி - கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
8. .நிரோஷான் பெரேரா - அரச கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர்
9.பாலித ரங்கே பண்டார - தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர்
10. ருவன் விஜேவர்தன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
11. மொஹான் லால் கிரேரு - பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சர்
12. சம்பிக்க பிரேமதாச - கைத்தொழில் மற்றும் வணிக விவகார இராஜாங்க அமைச்சர்
13. விஜயகலா மகேஷ்வரன் - சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
14. வசந்த சேனாநாயக்க - நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
15.சுஜீவ சேனசிங்க - சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்
16.வசந்த அலுவிஹாரே - விவசாய இராஜாங்க அமைச்சர்
17.சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே - நகர திட்டமிட்டல் மற்றும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
18. வீ. இராதாகிருஷ்ணன் - கல்வி இராஜாங்க அமைச்சர்
19.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா - புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
இன்று பதவியேற்ற பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு
1. சுமேதா ஜீ. ஜயசேன - நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்
2. சுசந்த புஞ்சிநிலமே - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர்
3. அமீர் அலி - கிராமிய பொருளாதார விவகார பிரதியமைச்சர்
4. லசந்த அலகியவன்ன - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்
5. இந்திக பண்டாரநாயக்க - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதியமைச்சர்
6. பைசர் காசிம் - சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர்
7. துனேஷ் கன்கந்த - இடர் முகாமைத்துவ பிரதியமைச்சர்
8.துலிப் விஜேசேகர - தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதியமைச்சர்
9.லக்ஷ்மன் வசந்த பெரேரா - பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதியமைச்சர்
10.நிஷாந்த முத்துஹெட்டிகம - துறைமுக மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர்
11. அனோமா கமகே - எரிபொருள் மற்றும் பெற்றோலிய வாயு பிரதியமைச்சர்
12. கலாநிதி ஹர்ஷ டி சில்வா - வெளிவிவகார பிரதியமைச்சர்
13. ரஞ்சன் ராமநாயக்க - சமூக வலுவூட்டல் மற்றும் சமூக சேவைகள் பிரதியமைச்சர்
14. எரான் விக்ரமரட்ண - கைத்தொழில் பிரதியமைச்சர்
15. அஜித் பி பெரேரா - எரிசக்தி மற்றும் சக்தி வலுவூட்டல் பிரதியமைச்சர்
16.அசோக்க அபேசிங்க - அசோக்க அபேசிங்க
17.அருந்திக பெர்னாண்டோ - உள்விவகார பிரதியமைச்சர்
18. தாராநாத் பஸ்நாயக்க - தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர்
19. மொஹமட் ஹாரிஸ் - விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்
20. கருணாரட்ன பரணவிதாண - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர்
21. நிமல் லான்சா - சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான பிரதியமைச்சர்
22.சிறிபால கம்லத் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்