(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை வரவேற்கும் நிகழ்வும் ,பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வும் ,மாபெரும் விஷேட பொதுக் கூட்டமும் 05-09-2015 நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி குர் ஆன் சதுக்கத்தில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்டையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இம் மாபெரும் விஷேட பொதுக் கூட்டத்தில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பிற்பாடு தற்போதய அரசியல் சூழ்நிலை தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவரின் ஆதரவாளர்கள் பலர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.
இவ் விஷேட பொதுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர்,காத்தான்குடி நகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஜெஸீம் உட்பட அதன் உறுப்பினர்களான சல்மா அமீர் ஹம்சா,அலி சப்ரி ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான றஊப் ஏ மஜீட் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் ,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டம் இடம்பெற்றதால் காத்தான்குடி பிரதான வீதியிலும் ,கூட்டம் இடம்பெற்ற பகுதியிலும் ,ஏனைய சில இடங்களிலும் பொலிசாரும்,விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.