GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக்க பெர்ணான்டோவும் நிமல் லன்சாவும் தமக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சுப் பொறுப்புக்களை மாற்றிக்கொண்டனர்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அருந்திக்கவுக்கு சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரம் வழங்கப்பட்டது.
நிமல் லன்சாவுக்கு உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சு வழங்கப்பட்டது.
எனினும் சத்தியபிரமாணம் முடிந்தவுடன் இருவரும் தமக்கிடையே அமைச்சுப்பதவிகளை மாற்றிக்கொண்டனர்.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினாலேயே நிமல் லன்சா தமது பொறுப்பை அருந்திக்கவுடன் மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






 
Top