நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடி குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை விரைவில் சமர்பிக்கும் படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற சபாநாயகரின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையில் காணப்படும் சில அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு ஊழல் மோசடி குற்றசாட்டுக்கள் காணப்படுவதாக பலர் குற்றசாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
குறித்த குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் உள்ளடக்கும் படி பிரதமர் தெரிவித்துள்ளார்.