GuidePedia

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபச்ச இன்று பாரிய நிதிக் குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளார்.
மஹியங்கனை பிரதேசத்தில் காணப்படும் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான அரச காணிகளை தமக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மஹிங்கனையில் காணப்பட்ட அரச காணிகள், எவ்வித திட்டங்களும் இன்றி விலை மனுக் கோராது தமக்கு நெருக்கமானவர்களுக்கு ஷசீந்திரா வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் 17 வயது மகளுக்கும் மஹியங்கனையில் காணி வழங்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான காணியை தமக்கு நெருக்கமானவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் மற்றும் நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்கு மூலங்களை அளித்து வருகின்றனர்.




 
Top