(எஸ்.அஷ்ரப்கான்)
ஒரு காலத்தில் தென்கிழக்கு பிரதேசம் என்றாலே தேசியம் மட்டுமல்லாது சர்வதேசமும் வியப்புடன் பார்த்த காலமிருந்தது. அங்கு தென்கிழக்கு பல்கலைக்கழகம், அட்டாளைச் சேனையில் தேசிய கல்வியில் கல்லூரிää அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, போன்ற கல்வித்துறையில் பங்களிப்புச் செய்யும் பல்வேறு அரச தாபனங்கள் நிறுவப்பட்டிருந்ததுடன் ஒலுவில் துறைமுகத்திற்கான முன்மொழிவும் செய்யப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இவை அனைத்தும் மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் அயராத முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. அவரது காலத்தில் ஒலுவில் துறைமுகம் தவிர மற்ற அனைத்து கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டமும் செயற்பட்டதனை அறியலாம். அவரது மறைவின் பின்னால் ஒலுவில் துறைமுகப் பணிகள் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் பலரது முயற்சியினால் தற்போது அதனை மீன்பிடி துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்ததனால் அங்குள்ள குறிப்பிட்ட பிரதேச மக்களின் தனியார் காணிகளை கடந்த 2008 ஆம் ஆண்டு (49.5 ஏக்கர் காணியை) அரசு சுவீகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அம்மக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈடும் வழங்குவதாக அரசு அறிவித்திருந்தும் பல போராட்டங்கள், தியாகங்கள் செய்து அம்மக்கள் தமது நஷ்டஈட்டைப்பெற களத்தில் நிற்கிறார்கள். ஆனால் ப10ரணமாக அவர்களுக்கு அந்த நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படாமை பாதிக்கப்பட்டோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மானப் பணிக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அரச விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நஷ்டயீட்டுத் தொகை வழங்கப்படாமல் மறுக்கப்பட்டமையினால் பலர் இன்றும் தங்களுக்கு காணியும் இல்லாமல்ää நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈடும் வழங்கப்படாமல் செய்வதறியாது வாழ்க்கையே சூனியமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குள் அமைந்துள்ள ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மானப் பணிக்காக 2008ம் ஆண்டு 48 பேர்களின் காணிகள் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டு அதில் 32 பேர்களின் காணித்துண்டுகள் காணி சுவீகரித்தல் 17வது சரத்தின்படி 2009ம் ஆண்டு அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்படி காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நஷ்டயீடு தொடர்பாக 2010ம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. மதிப்பீடு செய்யப்படாத எஞ்சியுள்ள காணிகளுக்கு பின்னர் மதிப்பீடு செய்வதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
அதன் காரணமாக நாங்கள் இவ்விடயம் தொடர்பாக அதிகாரத்திலிருந்த முன்னாள் நாட்டின் தலைவருக்கும், இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கும், முன்னாள் காணியமைச்சின் செயலாளருக்கும் பல தடவைகள் அப்போது மஹஜர்களை அனுப்பியிருந்தும் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக நம்பிக்கை இழந்து உள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு 2008ம் ஆண்டிலிருந்து பல வருடங்களாக பலவிதமான இன்னல்களுக்கு முகங்கொடுத்த வண்ணம் இவ்விடயத்தில் விமோசனமே கிடைக்காதா ? என்ற ஏக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். இவ்வாறான சூழ் நிலையில் 2012 ம் ஆண்டு கடைசிப் பகுதியிலிருந்து ஜனாதிபதி ஆய்வு உத்தியோகத்தர் ஒருவர் ஒலுவிலுக்கு அடிக்கடி வந்து காணி இழந்தவர்களிடம் பல கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு, 1 பேர்ச்சஸ் காணிக்கு ரூபா 30,000 க்கு மேல் வழங்க முடியாதென கூறியதுடன், எங்களுக்கு அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொண்டதாகவும், இவரின் நடவடிக்கைகள் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட எங்களுக்கு உரித்துடைய நஷ்டயீட்டுத் தொகையை குறைக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவே இருந்ததாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
“அப்போதைய ஆட்சியாளர்களால் இரண்டு கட்டங்களில் நஷ்டயீடு வழங்குவதாகவும் முதற் கட்டமாக 1 பேர்ச்சஸ் காணிக்;கு ரூபா 30,000 படி வழங்குவதாகவும் இரண்டாம் கட்ட நஷ்டயீட்டுத் தொகை வழங்குவது சம்பந்தமாக பின்னர் பேசித் தீர்மானிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டிருந்தும் கூட அது நிறைவேற்றப்படாமல் மக்களை ஏமாற்றி விட்டனர்”.
இவர்களது கூற்றின்படி 19 பேர்களுக்கு 1 பேர்ச்சஸ் 30 ஆயிரம் ரூபாய்கள் படி நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக் கொண்டதாகவும், இது காணி சுவீகரிப்பு சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் எனவும் தெரிவிக்கின்றனர்;.
அதன் பிற்பாடு இவர்கள் பக்க நியாயங்களையும் 5 வருடங்களாக நஷ்டஈடு வழங்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வருவதனையும் தெளிவுபடுத்துவதுடன், அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈடும் அத்துடன் காணி சுவீகரிக்கப்பட்ட தினத்திலிருந்து தாமதக் கொடுப்பனவும் (டயவந கநநள) வழங்கப்பட வேண்டுமென வாதிடுகின்றனர். ஆனால் இலங்கை துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் எங்களால் தீர்மானிக்கப்பட்ட 1 பேர்ச்சஸ் காணிக்கு ரூபா 30,000 படியான நஷ்டஈட்டை பெறுவதற்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால் எதிர்காலத்தில் நஷ்டஈட்டை பெறமுடியாத நிலைமை ஏற்படும் என்றும் அப்போது தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களது பொருளாதார நிலமை, பிள்ளைகளின் கல்வி, அபிவிருத்தி அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்திற் கொண்டும், நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலும், பயம் காட்டல் காரணமாகவும் 1 பேர்ச்சஸ்; காணிக்கு ரூபா 30,000 படி நஷ்டஈட்டை பெறுவதற்கு சம்மதக் கடிதத்தை சமர்ப்பித்து நஷ்டஈட்டை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அதனைப் பெற்றார்கள். ஆனால் இவர்களுக்கு தாமதக் கொடுப்பனவுகள் (LATE FEES) எதுவும் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
காணி சுவீகரிப்பு சட்டத்தின் 17வது சரத்திற்கமைய செய்யப்பட்ட அரச விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் விலை மதிப்பீட்டினை எவரும் விமர்சிக்கவோ அல்லது குறை காணவோ அல்லது அதன்படி நஷ்டஈட்டினை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கவோ முடியாது. அவ்வாறானால் அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களம் இருப்பதில் அர்த்தமற்றதாகிவிடும். மேலும் இவர்களது காணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையினை மீள் பரிசீலனை செய்யும்படி இலங்கை துறைமுக அதிகார சபையினால் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு 2011.09.21ம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு “மீள்பரிசீலனை செய்ய முடியாது” என 2011.12.30ம் திகதி விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் இலங்கை துறைமுக அதிகார சபை தலைவருக்கும், வரவு செலவுத் திட்ட பணிப்பாளர் நாயகத்திற்கும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கும் பிரதிகள் உட்பட அப்போதைய காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம்; ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக 2015.01.29 திகதி ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற விசாரணையின்போது விசாரணைக் குழுவினரால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கும், அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஏற்றுக் கொண்டதுடன், எதிர்காலத்தில் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த விடயத்தில் சிறுபான்மையினர், ஏழைகள் என்பதனால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவே கருத முடிகிறது. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்காகவும், விமோசனத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இவர்களின் பரிதாப நிலையறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையில் (1 பேர்ச்சஸ்-30,000 ரூபா படி கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகையினை கழித்து) மீதியாகக் கிடைக்க வேண்டிய மீதித் தொகையினையும். காணி சுவீகரிக்கப்பட்ட தினத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய தாமதக் கொடுப்பனவையும் பெற்றுக் கொடுப்பார்களா? அல்லது வழமைபோல் வாய் மூடி மௌனியாக இருப்பார்களா ?
அதுபோல் தற்போதைய நல்லாட்சியின் கீழ் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அரச விலை மதிப்பீட்டின்படி கிடைக்க வேண்டிய நஷ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் றணில் விக்ரம சிங்ஹ ஆகியோரின் முன்னுள்ள தார்மீகக் கடமையாகும் என காணியிழந்து நிர்க்கதியானோர் வேண்டி நிற்கின்றனர்.
(நன்றி- விடிவெள்ளி)