GuidePedia

சபாநாயகர் கரு ஜயசூரிய அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம், சபநாயாகர் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்திடம் கோரியிருந்தது. இந்த கோரிக்கை குறித்து ஆராயவே இவ்வாறு அவசர கட்சித் தலைவர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அரசியல் அமைப்பு பேரவை நிறுவுதல் தொடர்பில் கவனத்திற் கொண்டு நாடாளுமன்றைக் கூட்டுமாறு ஜே.வி.பி கோரியிருந்தது.
குறிப்பாக சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்க, அரசியல் அமைப்புப் பேரவையை நிறுவுதல் இன்றியமையாததாகின்றது.
எனவே அரசியல் அமைப்பு பேரவையை நிறுவுவது குறித்து நாடாளுமன்றில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க, இவ்வாறு ஜே.வி.பி நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்டுமாறு கோரியுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்டுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.



 
Top