GuidePedia

(எப்.முபாரக்)                
திருகோணமலை சேருநுவர  பிரதேசத்தில் சாராயம் குடித்துவிட்டு அண்ணனை தம்பி கத்தியால் குத்தி காயப்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று திங்கட்கிழமை(7) மூதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.                            மூதூர் கங்குவேளி புளியடிச்சோலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(6) இரவு அண்ணனும் தம்பியும் ஒன்றாக இணைந்து சாராயம் குடித்ததாகவும் பின்பு இருவரும் ஒருவருக்கொருவர் வாய்த்தர்க்கம் முற்றியதால் அண்ணணை தம்பி சாராமறியாக கத்தியால் குத்தியதால் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சந்தேக நபரின் அண்ணன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.               சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நேற்று மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.  



 
Top