GuidePedia





பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டாய தலைமைத்துவப் பயிற்சி நெறியை புதிய அரசாங்கம் நீக்கியமையை இட்டு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி நெறியை நிறுத்தி விட்டு, வேறு ஒரு பெயரில் அதனை செயற்படுத்த அரசாங்கம் முற்பட்டால், அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு விஜேசேகர அறிவித்துள்ளார்.



கடந்த அரசாங்க காலத்தில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டாய தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை நீக்கிவிடுவதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்திருந்தார். தலைமைத்துவப் பயிற்சி நெறிக்கு புறம்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அனைத்துப் பல்கலைக்கழக ஒன்றியம் இவ்வாறு கூறியுள்ளது.




 
Top