GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதையடுத்து அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று 9 புதன்கிழமை ஈடுபட்டனர்.
இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி முதலாம் குறிச்சி அபூ பக்கர் சித்தீக் வீதியில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வீதியால் சென்ற பொது மக்களுக்கு இனிப்பு பண்டங்களும்,குடிபானங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு காத்தான்குடியில் சில இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில் பாட்டாசுகள் கொழுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






 
Top