ரக்னா லங்கா நிறுவனத்தின் தற்போதைய தலைவர் விக்டர் சமரவீரவிடம் பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 14ம் திகதி விசாரணைகளுக்காக ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தி பொதுமக்களின் சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் போது எழுந்த சில பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திக்கொள்ள ரக்னா லங்கா நிறுவனத்தலைவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.