GuidePedia

தேசிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் தெரிவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் பிற்போடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 45 பேர் வரை நியமிப்பதென தேசிய அரசாங்கம் கொள்கை முடிவெடுத்துள்ளது.
எனினும் அரசின் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுக்கிடையில் பிரதியமைச்சுப் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது தொடர்பில் முரண்பாடு எழுந்துள்ளது. இரண்டு கட்சிகளும் எத்தனையெத்தனை பிரதியமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு ஒன்றை எட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அத்துடன் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 48 பேரை உள்வாங்க தீர்மானித்திருந்தாலும் தற்போதைக்கு 43 அமைச்சர்கள் மாத்திரமே பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஏனைய ஐந்து அமைச்சர்களும் பிரதியமைச்சர்களின் பதவியேற்பின்போது நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் எதிர்வரும் 09ம் திகதி ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



 
Top