GuidePedia

எகிப்தின் பிரதமர் இப்ராஹிம் மகலாப் உட்பட அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் தம் பதவிகளை ராஜினாமா செய்ததுடன் அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அதிபர் அப்துல் பதா அல் சிசி இடம் கையளித்தனர்.
அடுத்த அமைச்சரவை உருவாக்கபடும் வரை ஒருவரை பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை அதிபர் சிசி ஏற்றுக் கொண்டதாகவும், ஊழல் மோசடி குற்றச்சாட்டில் விவசாய அமைச்சர் கைது செய்யபட்ட ஒரு நாளின் பின்னர் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இந்த ராஜினாமா இடம்பெற்று அரை மணி நேரத்தில் முன்னாள் பெற்றோலியத்துறை அமைச்சர் ஷெரீப் இஸ்மாயில் என்பவர் தற்காலிக பிரதமராக அதிபர் சிசி நியமித்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிகின்றன.




 
Top