(எப்.முபாரக்)
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியத் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு மாபெரும் வரவேற்பும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (6) மாலை 4.30 மணியளவில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டதோடு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன்,சிவசக்தி ஆனந்தன் மற்றும் துரைரெட்ணசிங்கம்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெனார்த்தனன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜ சிங்கம்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கொட்டும் மலையிலும் எதிர் கட்சித் தலைவரைமேள தாளங்களுடன் திருகோணமலை பத்திரகாளி அம்மாள் ஆலயத்தின் முன்றலிலிருந்து திருகோணமலை நகர சபை மண்டபத்திற்கு அழைத்து வந்ததோடு இவ் விழாவில் பெருந்தொகையான பொது மக்கள் அரசியல் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.