(ஜிப்ரி சலாம்-கிண்ணியா)
கிண்ணியா பிரதேசத்தில் கல்வி வலயத்தில் இருக்கின்ற "தி/கிண்,TB ஜாயா மகளிர் வித்தியாலயத்தில்" 2015 ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றயிருக்கும் மாணவர்களின் நலன் கருதி அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் 100 நாள் விசேட செயற் திட்டமொன்று கடந்த வருடத்தில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று இம்முறையும் செயல் படுத்தப்படுகின்றது.
மேலும் இச் செயற்பாட்டிக்காக கணிதம்,தமிழ்,விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களால் மும்மொழியப்பட்ட செயல்திட்டங்களை உரிய உதவிக்கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2015-09-09ம் திகதி அன்று பாடசாலையின் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஸம்மில் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.