GuidePedia

இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுக்கும் இடையில் ஆலோனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திட்டம் குறித்து ஏற்கனவே மத்திய அமைச்சர் நிட்டின் கட்காரி தகவல் வெளியிட்டிருந்தார்.
ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பாலம் மற்றும் சுரங்கவழி பாதையாக இது அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்காக 25 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
மேலும் இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஆர்வம் காட்டி இருந்தது. இந்த நிலையிலேயே இந்திய பிரதமர் இது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது, குறித்த பாலமைப்பு வேலைத்திட்டம் குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






 
Top