அண்மையில் மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பகிர்ந்தளிக்கப்படாத பெரும்தொகை கடிதங்கள் மீட்கப்பட்டன.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான கடிதங்கள் மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட கடிதங்கள் கணக்கிடப்படுவதோடு, வாக்குமூலம் பெற்றுகொள்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடிதங்களை கண்டுபிடித்தவுடனே அதிகாரிகளின் வேலைகளை தடை செய்ய முடியாதென குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களை விசாரணை செய்வதற்கு முறையொன்று உள்ளதாகவும், அதற்கமைய வெளிப்படைத்தன்மையாக விசாரணை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக தபால் நிலைய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கடிதங்களில் வேட்பாளர்களின் 95% கடிதங்கள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அவை அனைத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சம்பந்தப்பட்ட கடிதங்கள் என கூறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.