மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்குச் சொந்தமான 'ரிவிர' பத்திரிகை நிறுவனம் கைமாறவுள்ளது. அதிகார மாற்றத்தின் பின் ராஜபக்ஷ குடும்பத்தினர் தங்கள் வசமிருந்த சொத்துக்களை விற்று காசாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் ஒருகட்டமாக மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் புதல்வர் யோஷித்தவின் 'சீ.எஸ்.என்' தொலைக்காட்சி நிறுவனம் ஐ.தே.க. அமைச்சர் தயா கமகேவிற்கு கைமாற்றப்பட முடிவாகியுள்ளது.
|
இந்நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தின் கையில் இருந்த இன்னொரு ஊடக நிறுவனமான 'ரிவிர' பத்திரிகை நிறுவனமும் தற்போது கைமாறவுள்ளது. இதனை லேக்ஹவுஸ் நிறுவன முன்னாள் தலைவரும், பிரபல ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார கொள்வனவு செய்யவுள்ளார். எனினும் இது தொடர்பான பேச்சுவார்த்தையின் போது பந்துல பத்மகுமார வழக்கம் போன்று ஸேர் அல்லது யுவர் எக்செலன்சி என்று விளிப்பதற்குப் பதிலாக மஹிந்த அண்ணே (மஹிந்த அய்யே) என்று விளித்துப் பேசியது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் அதிருப்தியடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|