GuidePedia


வால்மீகியின் ராமாயணம் பற்றி எழுதியதற்காக இந்து அடிப்படைவாதிகளிமிருந்து வந்த மிரட்டலை அடுத்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதுவதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது என கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய எழுத்தாளர் எம்.எம். பஷீர்  தெரிவித்துள்ளார்.

புகழ் பெற்ற இலக்கிய விமர்சகரும் முன்னாள் பேராசிரியருமான எம்.எம். பஷீர், வால்மீகியின் ராமாயணத்தை மையப்படுத்தி ராமரின் மனித பண்புகள் மற்றும் சீதையை தீக்குளிக்க சொல்லும் ராமர் மீதான வால்மீகியின் நுட்பமான விமர்சனம் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.
 
ஒரு இஸ்லாமியர் என்பதால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு உரிமை இல்லை என்று சில இந்து அடிப்படைவாதிகளிடமிருந்து வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகளை அடுத்து,  தொடர்ந்து எழுதுவதை நிறுத்தியுள்ளதாக பஷீர் கூறியுள்ளார். சிறந்த ஆசிரியர், புகழ் பெற்ற இலக்கிய விமர்சகர் என பல பெருமைகளையும், அடையாளங்களையும் கொண்ட தன்னை, சிலர் இஸ்லாமியன் என்று சுறுக்கிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறும் போது “என்னுடைய 75-வது வயதில், நான் ஒரு முஸ்லிமாக மட்டும் சுறுக்கப்பட்டுவிட்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.



 
Top