GuidePedia

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களின் இரத்தமாதிரிகளை தனியார் இராசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியாவி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 9 நபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்கள் .
குறித்த 9 சந்தேக நபர்களினதும்  இரத்த மாதிரிகளைப்  பெற்று மரபணு பரிசோதனைக்குட்படுத்துமாறு கடந்த வழக்கில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்  பிரகாரம் குறித்த 9 சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு அது தொடர்பான  அறிக்கையினை சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
குறித்த இரத்த மாதிரிகளை தனியார் இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதுடன் 9 நபர்களையும் எதிர்வரும் -15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்   நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.



 
Top