(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக 6229 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 21ஆயிரத்து 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கந்தளாய் தவிர்ந்த பத்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதென திருகோணமலை மாவட்ட செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:தொடர்ந்தும் மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சி காரணமாக கிணறுகள் குளங்கள் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் குடிநீருக்கான பஞ்சமும் ஏற்படும்.இவ்வரட்சியில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக திருகோணமலை பட்டிணமும் சூழலும்,சேருவில,மூதூர்,கிண்ணி யா,வெருகல்,ஆகிய பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இப்பிரதேசங்களி ல் குடிநீர்ப்பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைக்கும் முகமாக இடர் முகாமைத்துவ அமைச்சு 3.5 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.பத்து பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும்உள்ளூராட்சி அமைப்புகளினூடாக குடி நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். குடி நீர் பிரச்சினையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களாக கன்னியா,வில்கம் விகாரை,கப்பல்துறை,பாட்டாளிபு ரம்,நவரட்ணபுரம்,கூனித்தீவு,கு ச்சவெளி,புல்மோட்டை,ஆகிய பிரதேசங்கள் காணப்படுவதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
