அரியலூர் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்ததாக ராணுவத்தில் பணியாற்றுபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கண்டிராதீர்த்தம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பால்ராஜ் மகள் தீபிகா. திருவையாறு அரசர் கல்லூரியில் பி.லிட் 3 ஆண்டு படித்துவந்தார். அவரது பக்கத்து கிராமமான தங்கசாலையைச் சேர்ந்தவரும் ராணுவத்தில் பணியாற்றுபவருமான ராஜா, தீபிகாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் 4 மணி நேரம் கழித்து ராஜா, அவரது தம்பி தினேஷ், அவரது தாயார் சாரதா ஆகிய 3 பேரும் தீபிகாவை ரத்த வெள்ளத்தில், மயக்க நிலையில் கொண்டு வந்தனர்.
விசாரணையில் ராஜா தீபிகாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்ததும், அதனை மறைக்க தம்பி மற்றும் தாயாருடன் சேர்ந்து தீபிகா விபத்தில் காயமடைந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. திருமானூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி - NEWS7
