GuidePedia

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய திவயின ஞாயிறு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தான்திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் இந்தத் தடவை தேர்தல் ஆரம்பித்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோத்தபாய ஆகியோர் எங்களைத் தோற்கடிப்பதில் குறி வைத்து இயங்கினார்கள்.
எங்கள் பிரதேசத்தின் இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நாங்கள் வெற்றி பெற்றால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வதந்தியைப் பரப்பினார்கள்.
அதனை நம்பி மக்கள் எங்களுக்கு வாக்களித் தயங்கியதன் காரணமாகவே நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்று எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள எஸ்.பி. திசாநாயக்க,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உடைந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதில் நாங்கள் முன்னின்றோம். ஆனால் அவர் எங்களைத் தோற்கடிப்பதில் குறியாக இருந்தார்.
இதுதான் நன்றிகெட்ட அரசியல் சந்தர்ப்பவாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top