GuidePedia

பொதுத் தேர்தலின்போது ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியை சுற்றியிருப்பதாக பொலனறுவை மாவட்டத்தில் முன்னணியின் கீழ் போட்டு தோல்வியடைந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியஆராச்சி மற்றும் ஹங்குராங்கொடை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுசந்த ஞானரத்ன ஆகியோர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட சந்திரசிறி சூரியஆராச்சி,
இம்முறை நடைபெற்றதனை போன்றதொரு தேர்தலை போன்று என் வாழ்நாளில் ஒரு தேர்தலை பார்த்ததில்லை. எங்கள் தோல்விகளுக்கு மஹிந்த பொறுப்பு கூற வேண்டும் என்பதனையும் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். 
தேர்தலின் போது மைத்திரி தரப்பு, மஹிந்த தரப்பு என பிரிந்து கொண்டார்கள். மக்கள் நாங்களும் மஹிந்த தரப்பு என நினைத்து கொண்டார்கள்.
பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்நதவர்கள் இன்று வெட்கமின்றி ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று மைத்திரியை சுற்றி வருகின்றனர்.
ஏன் என்றால் அமைச்சு பதவிகளை பெற்றுகொள்வதற்கு. அவ்வாறு அமைச்சு பதவிகளை பெற்றுகொள்வதற்கு வெட்கம் இல்லையா என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top