GuidePedia

மிக விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிவிட்டு அமைதியாக இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியினால், ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல உள்ளூராட்சி நிறுவனங்களின் ஆட்சி காலம் நிறைவடைந்துள்ளமையினால் அவை தற்போது ஆணையாளரின்  கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.
ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களின் ஆட்சி காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது.
தற்போதைய நிலைமைக்கமைய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடுவது சுதந்திர கட்சிக்கு சாதகம் என்ற கருத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் கடந்த முறை முன்னணியின்  உள்ளூராட்சி பிரதிநிதிகள் பெரும்பான்மை முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



 
Top