GuidePedia

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐ ம. சு. கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றதிற்கு தெரிவான பிரபல நடிகை கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் வெளிநாட்டில் பிரஜா உரிமை பெற்ற ஒருவருககு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது. ஆனால் கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து பிரஜா உரிமை பெற்றுள்ளதால் அவரின் எம். பி. பதவி ரத்தாகுமென தெரியவருகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் கீதா குமாரசிங்க 63,955 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றம் தெரிவானார். விருப்பு வாக்குப்பட்டியலில் அடுத்ததாக முன்னாள் அமைச்சர் பியசேன கமகே உள்ளதோடு அவர் பாராளுமன்றம் தெரிவாகாதது குறிப்பிடத்தக்கது.



 
Top