GuidePedia

பொதுமக்களின் துரதிருஷ்டம் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோல்வியுற நேர்ந்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி (பபா) தெரிவித்துள்ளார்.
வாரஇறுதி லக்பிம பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள உபேக்ஷா, பொதுமக்களின் முன்னேற்றம் குறித்து எனக்குள் ஏராளம் திட்டங்கள் இருந்தன. ஆனால் அவற்றை நிறைவேற்றிக் கொள்ள முன் நாடாளுமன்றத் தேர்தலில் நான் தோல்வியுற்றுள்ளேன். அந்த வகையில் எனது தோல்வி எனக்குத் தனிப்பட்ட பாதிப்பு என்பதை விட பொதுமக்களின் துரதிருஷ்டமாவே நான் கருதுகின்றேன்.
என்னைப்பொறுத்தவரை நான் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேனா இல்லையா என்பது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கு இன்னும் நாட்கள் செல்லும்.
ஆனால் நான் தொடர்ந்தும் முன்பு போன்று நடிப்பில் ஈடுபடுவேன். நடிப்புத் துறையே எனக்கு ஏராளம் விடயங்களை பெற்றுத் தந்தது. அரசியலுக்கும் வழியேற்படுத்தியது. அதனைக் கைவிட மாட்டேன் என்றும் உபேக்ஷா ஸ்வர்ணமாலி தெரிவித்துள்ளார்.



 
Top