GuidePedia

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் நாளைய தினம் (27) அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எப்படியானபோதும், 30க்கு குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களே நாளை பதவியேற்பர் எனவும் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது குறித்த அமைச்சு பங்கீடு தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இதுவரை எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top