GuidePedia

புதிய தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் ஐ.தே.முன்னணிக்கும், ஏனைய அமைச்சுக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே பகிர்ந்து கொள்வதற்கு  இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நெடுஞ்சாலைகள், உயர்கல்வி, நீர்ப்பாசனம், கமத்தொழில் மற்றும் சமுர்த்தி அமைச்சுக்களை லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குவதற்கு இஇணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தேசிய பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி சூழல் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் வைத்திருக்க போவதாகவும் நிதியமைச்சு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்படுமென்றும் தெரியவருகிறது.
பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சு லக் ஷ்மன் கிரியெல்லவுக்கும் ஹரீன் பெர்னாண்டோவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சும் தயா கமகேவுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சும் எரான் விக்கிரமரட்னவுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சும் சஜித் பிரேமதாஸவுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சை மட்டும் வழங்கி சமுர்த்தி விவகாரத்தை தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்தோடு பொருளாதார அமைச்சு ஏற்படுத்தப்பட்டு அதனை மலிக் சமரவிக்ரமவிற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. நிதியமைச்சு தொடர்பில் ஐ.தே.முன்னணிக்குள் பலத்த போட்டி நிலவிய நிலையில் அதனை பிரதமர் தன் கையில் வைத்திருப்பார் என்றும் அறிய வருகிறது.



 
Top