GuidePedia

(அஸ்ரப் .ஏ .சமத்)
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னா் இன்று கொழும்பு பெரிய பள்ளிவசால் மற்றும்  ஹிந்து கோவிலுக்கு விஜயம் மேற்கொண்டாா்.

பிரதமருடன் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்த – ஜ.தே.கட்சியின் செயலாளா் கபீா் ஹாசீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்….
அமைச்சரவை நியமனம் செய்வது மேலும் 2 அல்லது 3 நாட்கள் பிட்போடப்பட்டுள்ளது. ஜ.தே.கட்சிக்கு 106 ஆசனங்கள் கிடைத்துள்ளது. நாங்கள் ஆட்சியமைப்பதற்கு இன்னும் 10 ஆசணங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
மகிந்த   அணியில் சிலா் எங்களுடன் பேச்சுவாரத்தை நடத்துகின்றனர். அத்துடன் ஸ்ரீ.ல.சு.கட்சியில் உள்ள சிலரும் எங்கள் கட்சியில் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனா்.
தேசிய அரசாங்கம் பேச்சுவாா்த்தை சரிவரும் பட்சத்தில் ஆட்சியமைப்போம். அல்லது எங்களுடன் இணைந்துகொள்ள  உள்ள பாராளுமன்ற உறுப்பிணா்களையும் சோ்த்து 125 பாராளுமன்ற உறுப்பிணா்களைக் கொண்டு எம்மால் ஆட்சியமைக்க முடியும். அதுமட்டுமல்ல ஜே.வி.பி மற்றும் ரீ.என்.ஏ யும் எங்களுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளனா்.
யுத்தம் முடிவுற்றாலும் அந்த யுத்தம் பின்னரான நடைமுறைகள் மக்களிற்கு ஒரு நிரந்தர சமாதானம் இன்னும் முடிவுரவில்லை. தேசிய அரசாங்கம் அமைப்பதில் பல சிக்கல் உள்ளன. அமைச்சுக்கள் பறிமாறுவது, மற்றும் தீா்வுத்திட்டம், பல பிரச்சினைகள் உள்ளன. அவைகள் அனைத்தும் சுமுகமாக முடிவுக்கு வந்தால் நாங்கள் தொடருவோம். அல்லது அப்பக்கத்தில் இருந்து வருபவா்களை இணைத்து பெரும்பாண்மைக் கொண்டு அரசாங்கத்தை அமைப்போம் என கபீா் ஹாசீம் குறிப்பிட்டார்.



 
Top