(க.கிஷாந்தன்)
இரு பெண்களை கத்தியினால் குத்தியும் பொல்லுகளினால் தாக்கியும் படுங்காயங்களுக்குள்ளாகிய பதினேழு வயது சிறுவனை கண்டுபிடிக்க மடுல்சீமை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் மடுல்சீமை பகுதியின் மெட்டிகாதன்னை என்ற இடத்தை சேர்ந்த இரு பெண்களே பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களாவர் . இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25.08.2015) மெட்டிகாதன்னை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இத் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும் தாக்குதலை மேற்கொண்ட 17 வயது சிறுவன் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதால் கைது செய்ய முடியவில்லையென்றும் தேடுதல்கள் மேற்கொண்டிருப்பதாகவும், மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
படுங்காயங்களுக்குள்ளான ஸ்ரீயானி தேவிகா என்ற பெண்ணை கொலை செய்ய முயன்றபோது அதனை கண்ட பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டதுடன் கொலை முயற்சியூம் தோல்வியுற்றிருப்பதாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.