(எப்.முபாரக்)
திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சேருநுவர பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(30) இரவு சென்ற வேலையில் குறித்த வீட்டுக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பொலிஸார் காயங்களுக்குள்ளானதோடு மூன்று பெண்களும், ஒரு ஆணும் காயங்களுக்குள்ளாகி வெருகல் ஈச்சிலம் பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனைப் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்து கள்ளச்சாராயம் காய்த்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் குறித்த வீட்டினை சோதனை மேற்கொள்ள முயற்சித்த போது பொலிஸாரைத் செல்லவிடாது தாக்கியதாகவும் இதனால் பொலிஸாருக்கும் குறித்த வீட்டுக்காரர்களுக்கும் கைகலப்பாகி அதில் நான்கு பொலிஸார் காயமானதோடு நிலைமையைகட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல குறித்த இடத்துக்கு இராணுவத்தினரும் மேலதிக பொலிஸாரும் வரவலைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் குறித்த நபர்களினால் கள்ளச்சாராயம் காய்க்கப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸால் தெரிவிக்கின்றனர்.