(எம்.எஸ்.எம்.ஹனீபா)
தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட முத்திரை இலவச அஞ்சல் வசதி மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டி.எம்.பி.ஆர். அபயரத்ன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2015.06.26ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச்செய்யப்பட்டிருந்தது. அதன்படி சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் கடிதம் அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரையை பாவித்து கடிதம் அனுப்பும் வரப்பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது.
புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய்பபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முத்திரை மூலம் இலவச அஞ்சல் வசதியை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சகல அஞ்சல் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.