GuidePedia

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.
அவருடன் அமெரிக்காவின் மனித உரிமைகள் தொடர்பின்  ஜனநாயக செயலாளர் டொம் மலிநொஸ்கியும் இலங்கை வந்துள்ளார்.
இந்த தகவலை அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் சத்தியா ரொட்ரிக்கோ வெளியிட்டுள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பு ஜனநாயக மேம்பாடு மற்றும் நல்லிணக்கம் மற்றும் நீதித்துறை வலுப்படுத்தல் என்ற அம்சங்களின் கீழேயே இவர்கள் இலங்கையில் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிஷா பிஸ்வால் இடையிலான சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதன் பின்னர் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் நிஷா பிஸ்வால் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இவர்களுடனான சந்திப்பின் பின்னர் நிஷா பிஸ்வால் இலங்கையிலிருந்து விடைபெறவுள்ளார்.



 
Top