(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய அப்துல்லாஹ் மஹ்ரூப்புக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும்.என திருகோணமலை மாவட்ட முதுகலைமாணி பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்:அனுபவம் ஆற்றல் மற்றும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகளை ஆழமாக ஆராய்ந்து வைத்திருப்பவர் என்பதனாலும் இம் மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு செல்லக்கூடியவர் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நிறைவேற்றப்படாத ல திட்டங்கள் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றக் கூடியவர் என்பதனாலும் இவருக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் கரையோரங்களில் வாழுகின்ற மீனவர்கள் சுயமாக மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றைப்நிவர்த்தி செய்து மீனவர்கள் நலனில் அக்கறை காட்டவும் பல ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் நீர்ப்பாசனம் பெறாமல் விவசாயிகள் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதேபோன்று கால் நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சவ் நிலங்கள் இன்றி பல பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கானமக்களுக்கு சரியான தீர்வொன்றைப் பெற்றுத்தரவும் நவின யுகத்திற்கு ஏற்ப விஞ்ஞான தொழில் நுட்பங்களை அடுத்த சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் இவற்றில் ஈடுபாடும் அக்கறையும் கொண்டவரான இவருக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும்.என்றும் தெரிவிக்கப்படுகின்றது.