GuidePedia

மதுபானம் மற்றும் சிகரெட் மீதான வரி வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மதுபான வகைகள் மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திப் பொருட்களுக்கு அரசாங்கம் வரி அறவீடு செய்து வருகின்றது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மதுபானம் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களின் மூலம் அரசாங்கம் பாரியளவில் வரி வருமானம் ஈட்டியுள்ளது.
இதன்படி, ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மதுபானம் ஊடான வரி 41664 மில்லியன் ரூபா வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 51.8வீத அதிகரிப்பாகும்.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திப் பொருட்களுக்காக 32305 மில்லியன் ரூபா வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இது 53.2 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top