GuidePedia

ஆறறிவு படைத்த மனிதர்களுக்குள்தான் இன, மத, சாதி, வகுப்புவாரி, மொழிவாரி, வர்ணாசிரமவாரி பிரிவினைகள் எல்லாம். ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களான எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை.
எங்களைப் பொருத்தவரை இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஒரேஇனம்தான் என்பதை சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் வளர்ந்துவரும் ஒரு நாயும் சைபீரிய இனத்தைச் சேர்ந்த மூன்று புலிக்குட்டிகளும் நிரூபித்துள்ளன.
வடகிழக்கு சீனாவில் உள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு சைபீரிய இனப் புலி மூன்று குட்டிகளை அடுத்தடுத்து ஈன்றது. சொந்த குட்டிகளுக்கு பாலூட்ட மறுத்த தாய்ப்புலி முறைப்பு காட்டிவந்த நிலையில், இந்த அரியவகை புலிக்குட்டிகளின் உயிரை எப்படி காப்பாற்றுவது என அந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள ஊழியர்கள் கவலைப்பட்டனர்.
அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக அதே மிருகக்காட்சி சாலையில் வளர்ந்துவரும் ஒரு பெண் நாய் கைகொடுக்க முன்வந்தது. அந்த மூன்று குட்டிகளையும் அந்த நாய் தனது சொந்தப் பிள்ளைகளாக பாவித்து, நேசத்துடனும், பாசத்துடனும் பாலூட்டும் நெகிழ்ச்சி காட்சியை மேற்படி மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் ‘யூடியூப்’ வாயிலாக பதிவேற்றமும் செய்துள்ளனர்.



 
Top