GuidePedia

டி20 உலகக் கிண்ணம் 2007 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 5 உலகக்கிண்ண தொடர்கள் நடைபெற்றுள்ளது.
50 ஓவர் உலகக் கிண்ணத்தை 5 தடவை கைப்பற்றிய (1987, 1999, 2003, 2007, 2015) அவுஸ்திரேலிய அணி இதுவரை 20 ஓவர் உலக கிண்ணத்தை வெல்லவில்லை.
அடுத்த ஆண்டு (2016) இந்தியாவில் நடைபெறும்  டி20  உலக கிண்ணத்தை வெல்வோம் என்று அவுஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் வோர்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
ஐ.பி.எல். போட்டியில் பெரும்பாலான அவுஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவதால் இந்திய ஆடுகள தன்மையை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் நடைபெறும்  டி20  உலகக்கிண்ணத்தை வெல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களால் சிறப்பாக விளையாடி  டி20 உலக கிண்ணத்தை முதல் முறையாக வெல்ல முடியும். இந்தப்போட்டி சற்று சவாலாக இருந்தாலும் அபாரமாக விளையாட இயலும் என்ற நம்பிக்கை உள்ளது என வோர்னர் தெரிவித்துள்ளார்.



 
Top