GuidePedia

(எப்.முபாரக்)               
கந்தளாய் ஜயந்திபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.         கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலையில் ஏற்பட்ட மோதலில் பொல்லால் தாக்கி காயங்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் சாராயம் குடித்து விட்டு  இரண்டு  குழுக்களுகிடையிலான வாய்த்தாக்கமே மோதலுக்கு காரணம் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                  காயங்களுக்குள்ளான இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்                     குறித்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு  வருவதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



 
Top