அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது இரண்டு சகோதரிகளின் ஆலோசனையின் பேரிலேயே தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்து பாதுகாப்பை பெறும் பொருட்டே அவர் இரண்டு சகோதரிகளான பிரீதி மற்றும் காந்தி ஆகியோரின் பெயர்களை போலியாக மஹிந்த கூறியிருக்கலாம் என்று இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.