(எப்.முபாரக்)
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்த வியாபாரி ஒருவரை ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் நேற்று சனிக்கிழமை (8/29) இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக ஒருவர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை சோதனை செய்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபருக்கெதிராக பல வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ஒன்றறை கிலோ கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.