GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக்கத் தீர்மானித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தனிக்கட்சியொன்றை ஆரம்பிக்கவும் ஆலோசித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் இந்தக் கூட்டணிக்கு சுமார் 60-70 வரையான சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் செயலாளராக முன்னாள் சுதந்திரக் கட்சி செயலாளர் அனுர யாப்பாவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று தெரிகின்றது.
இந்தப் புதிய கூட்டணியைச் சேர்ந்தவர்கள் நாளை நாடாளுமன்றம் கூட்டப்படும்போது ஒன்றிணைந்து தனியாக அமரவும், அதன் பின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தங்களது அணிக்கு வழங்கும்படி கோரிக்கை விடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.
இவர்களின் தீர்மானப்படி எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி கூட்டணிக் கட்சியொன்றுக்கு வழங்கப்படவுள்ளது.



 
Top