GuidePedia

(க.கிஷாந்தன்)
பதுளை மாவட்டத்தின் வெலிமடை கெப்பட்டிபொல பகுதியிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையமொன்றில் அடையாளந் தெரியாதோரால் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வானொன்றில் வருகை தந்தவர்களால் 31.08.2015 அன்று அதிகாலை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பட்டிபொல கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது அங்கிருந்த எரிபொருள் நிரப்புனரும், காவலாளியும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், எனினும் குறித்த இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பணம் திருடப்பட்டிருக்கும் என எரிபொருள் நிரம்பும் நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.

வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 
Top