GuidePedia

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஜனநாயகக்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சரத் பொன்சேகா மற்றும் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, அந்த இடத்திற்கு பொன்சேகாவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததுடன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இது தொடர்பான கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்து.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜெயதிலக்கவிடம் ராஜினாமா செய்வது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் அவர் அதனை நிராகரித்துள்ளார்.
எவ்வாவாறாயினும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டால், அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என பொன்சேகா கோரியிருந்தாக கூறப்படுகிறது.



 
Top