எதிர்கட்சி தலைவர் பதவி தனக்கு வழங்கப்படும் என்றால் அதனை ஏற்றுகொள்ள தயார் என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
தான் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 33 வருடங்களாக நாடாளுமன்றில் செயற்படுகின்ற தான் ஒரு போதிலும் கட்சியை மாற்றியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் தனது மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று கொண்டு தனது மாவட்டத்தை வெற்றி பெற செய்தமையும் தான் என அவர் கூறியுள்ளார்.
எனவே எதிர்கட்சி தலைவர் பதவியை ஏற்றுகொள்வதற்கு விரும்புவதாக குமார் வெல்கம மேலும் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.