கடும் போக்காளர்களை மக்கள் தோற்கடித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
சுதந்திர இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 17ம் திகதி நடைபெற்றது.
தேர்தலை சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடத்த பொலிஸ் மா அதிபரும் தேர்தல் ஆணையாளரும் வழங்கிய காத்திரமான பங்களிப்பு பாராட்டுக்குரியது.
தேர்தல் ஆணையாளர் பொலிஸ் மா அதிபர் மற்றும் அவர்கள் தலைமையிலான அரச அதிகாரிகள் அனைவரும் நன்றி பாராட்ட வேண்டியது எமது கடமையாகும்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது இன மதவாத கடும்போக்காளர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கிலும் தெற்கிலும் கடும்போக்காளர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். குறுகிய கடும்போக்குவாத கொள்கைகள் அனைத்தையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
அனைத்து இலங்கையர்களும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌபாக்கியமான இலங்கையை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.