அட்டாளைச்சேனை மண் விகிதாசாரத் தேர்தல் வருவதற்கு முன்னர் தொகுதிவாரித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றம் முதல் இன்று வரைக்கும் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அட்டாளைச்சேனை தள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜலால்தீன் மற்றும் பெருந்தலைவர் அஷ்ரப் ஆகியோரின் பிற்பட்ட காலத்தில் அட்டாளைச்சேனை மண் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்க்கப்பட்டு வரும் அதேவேளை பெயர் சொல்லும் அளவிற்க்கு அபிவிருத்தி என்பது இங்கு நடைபெறவில்லை என்பதை கசத்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இலங்கையில் ஆகக் கூடியளவான விகிதாசாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுகின்ற பிரதேசம் அட்டாளைச்சேனையாகும். அம்பாரை மாவட்டத்தில் சகல பிரதேசங்களுக்கும் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய போதிலும் அட்டாளைச்சேனையை மட்டும் தொடர்ந்தும் புறக்கணித்தே வந்துள்ளார்கள்.
தமது மண்ணை முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணித்தபோதும் கட்சியின் மீதான பற்றுக்காரணமாக அந்தக்கட்சிக்கே வாக்களித்தே வந்துள்ளனர். இந்த முறைதான் பலமானதொரு வாக்குறுதியை தலைவர் ஹக்கீம் அவர்கள் வழங்கினார்கள். மற்ற ஊர்களைப்போல் எம்.பி பதவிக்காக கட்சியைக் காட்டிக்கொடுத்த ஊர் அட்டாளைச்சேனையல்ல.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நூற்றுக்கு நூறுவீதம் முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு வாக்களித்து வந்த ஊர் என்ற வகையில் அதற்கான நன்றிக்கடனாக முஸ்லிம் காங்கிரஸ்சின் தலைமை இம்முறை கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலை அம்மண்ணையும் அம்மக்களையும் கௌரவித்து வழங்க முன்வந்த விடயம் யாவரும் அறிந்ததே அதற்காக என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக கடமைபட்டவர்களாக அட்டாளைச்சேனை மக்கள் உள்ளனர் என்பதை மனபூர்வமாக தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
சம்மாந்துறை மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தொப்பி முகைதீன் மூன்று தடவைகளும், அன்வர் இஸ்மாயில் ஒரு தடவையும், இன்று மன்சூரும் எம்.பி கிடைத்திருக்கின்றது. இதற்கிடையில் கடந்த முறை சம்மாந்துறை பிரதேச சபையை சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த நௌசாத் கைப்பற்றியிருந்தார். இன்று அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக கூடுதலான வாக்குகள் மாற்றக்கட்சியினருக்கு அளிக்கப்படும் இ்டமாகவும் சம்மாந்துறை திகழ்கின்றது.
அட்டாளைச்சேனை மண் எந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைக் காட்டிக் கொடுக்கவி்லலை.குறிப்பிட்ட சில வருடங்கள் எம்.பி பதவி இல்லாத நிலையில் சம்மாந்துறைக்கு எம்.பி வேண்டும் என்ற எத்தனையோ போராட்டங்களை நடத்தினீர்கள்.நீங்கள் கூறுவது போன்று சம்மாந்துறை மண்ணும் கட்சி்ககாகவும், மற்றய இடங்களைப் பாதுகாப்பத்ற்காகவும் வேட்பாளரை நிறுத்தாமல் அட்டாளைச்சேனைக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்.
உங்களுடைய தேவைபப்ாடு முடிந்துவிட்டதற்காக மற்றய ஊரை விட்டுக்கொடுக்கச் சொல்லுவது எந்த வகையில் நியாயமாகும்.
அட்டாளைச்சேனை மண்ணுக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினால் அது எதிர்காலத்தில் எமது பிரதேச பாராளுமன்ற உறுப்புருமைக்கு சவாலாக அமைந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவோ என்னவோ சிலர் அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் வழங்குவதை மறைமுகமாக தடுக்க முற்படுகின்றனர்.
“சாமியார் கொடுத்தாலும் பூசாரியார் மறுப்பதாக உள்ளது” அட்டாளைச்சேனைக்கான தேசிய பட்டியல் விவகாரம் கடந்த மூன்று தசாப்தங்களாக தவம் இருந்து கிடைக்க உள்ள இம்மண்ணிற்க்கான கௌரவம் இப்பாராளுமன்ற அலங்கரிப்பு இம்மண்ணில் பிறந்த மைந்தன் ஒருவன் நாடாளுமன்றில் அமரும் சந்தர்பம் அது முஸ்லிம் காங்கிரஸ்சால் மட்டுமே முடியும் என்பதற்கிணங்க முஸ்லிம் காங்கிரஸ்சின் தலைமை வழங்கிய வாக்குறுதிக்கமைய அதை வழங்குவதற்காண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் “வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக” சகோதரர் மிஸ்பா அவர்களின் கட்டுரை காணக்கிடைத்தது.
உண்மையில் சகோதரர் மிஸ்பா அவர்கள் யாரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான ஒரு கட்டுரையை வரைந்துள்ளார் என்று தெரியவில்லை ஆனாலும் உங்களின் வேண்டுதலின் மூலம் அட்டாளைச்சேனை மண்ணில் பிறந்த ஒவ்வொரு மகனும் வேதனை அடைந்துள்ளான் என்பதை உங்களுக்கு நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை
நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் கடந்த பாராளுமன்ற தேர்தல் களநிலவரங்களின் படி அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு கிடைத்த வாக்குகள் எந்த பக்கம் சாய்ந்திருதாலும் அந்த பக்கம் வெற்றி நிச்சயிக்க பட்டிருந்ததை நீங்கள் மறுக்க முடியாது அது அதாவுல்லா தலைமையிலான சுதந்திர கூட்டமைப்பானாலும் சரி ரிஷாத் பதுருத்தீன் தலைமையிலான அ.இ.ம. காங்கிரஸ்சானாலும் சரியே.
இன்னொன்று நீங்கள் மறுக்க முடியாத உண்மை அட்டாளைச்சேனை மண் கடந்த பாராளுமன்ற தேர்தலை பகிஷ்கரித்திரிந்தாலோ அல்லது மாற்றுகட்சிக்கு வாக்களித்திரிந்தாலோ முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பெற்றிருக்கும் மூன்று உறுப்பினர்களும் கேள்விக்குறியே என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்
சகோதரர் மிஸ்பா அவர்களே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயில் அவர்களுக்கு பின்னர் சம்மாந்துறை மண் இழந்த பாராளுமன்ற பிரதிநிதியை இம்முறை கிடைக்கபெற்றதை இட்டு முதலில் மகிழ்வது அட்டாளைச்சேனை மக்களே ஏன் என்றால் சகோதரர் மன்சூர் அவர்களுக்கு சம்மாந்துறையில் கிடைத்த வாக்குகளைவிட அட்டாளைச்சேனை மக்களே அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பதை மறந்துவிடவேண்டாம்.
சம்மாந்துறை மண் பத்து வருடங்கள் மட்டும் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத கவலையை அறிந்திருந்தும் அட்டாளைச்சேனை மண் மூன்று தசாப்தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத கவலையை உங்களால் உணரமுடியாமல் இருப்பது உங்களின் சுயநலத்தை காட்டுகின்றது.
பர்ஸான் எஸ் முஹம்மது
அட்டாளைச்சேனை