GuidePedia

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர்களை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்த மனு தொடர்பான நீதிமன்ற விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை இந்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் கிடைக்காததன் காரணமாகவே விசாரணைகள் பிற்போடப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதி தவிசாளர் சோமவீர சந்திரசிறியினால் கடந்த 26ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினரான சோமவீர சந்திரசிறியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top